பிலிப்பைன்ஸ் கடலில் கைவி­டப்­பட்டு மிதந்த சொகுசு கப்­பலில் ஜேர்மன் பிர­ஜை­யி­னது மம்­மி­யான சடலம்

Published By: Raam

02 Mar, 2016 | 09:01 AM
image

பிலிப்பைன்ஸ் கடற்­க­ரைக்கு அப்பால் கடலில் கைவி­டப்­பட்ட நிலையில் மிதந்த சொகுசுக் கப்­ப­லொன்­றி­லி­ருந்து மர்­ம­மான முறையில் இறந்து மம்­மி­யா­கிய நிலையில் காணப்­பட்ட ஜேர்­ம­னிய பிர­ஜை­யொ­ரு­வ­ரது சடலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

துணி­கர செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வதில் ஆர்வம் உள்­ள­வ­ரான மான்­பிரெட் பிறிட்ஸ் பஜோ­ரத்தின் (59 வயது) என்ற மேற்படி நபரின் சடலம் இரு மீன­வர்­களால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

நீரில் பெரும் பகுதி மூழ்­கி­யி­ருந்த அந்தக் கப்­பலின் அறையில் புகைப்­படத் தொகுப்­பொன்றும் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் 2010 ஆம் ஆண்டு மே 2 ஆம் திகதி புற்­று­நோயால் மர­ண­மான தனது மனைவி கிளா­டி­யா­வுக்கு (53 வயது) அஞ்­சலி செலுத்தும் வகையில் பிறிட்ஸ் எழு­தி­யி­ருந்த 32 சொற்­களைக் கொண்ட இரங்கல் குறிப்­பொன்றும் அங்கு காணப்­பட்­டது.

“ 30 வரு­டங்­க­ளாக நாம் ஒரே பாதையில் பய­ணித்­துள்ளோம். ஆனால் வாழ்­வ­தற்­கான எமது விருப்­பத்தை விடவும் அரக்­கர்­களின் பலம் அதி­க­மாக இருந்­ததால் நீ சென்று விட்டாய். உனது ஆன்மா அமைதி அடை­ யட்டும்" என அந்த இரங்கல் குறிப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அவர், தன்­னுடன் சொகுசுக் கப்­பலில் உலக சுற்றுப் பய­ணத்தை மேற்­கொண்ட தனது மனை­வி­யி­ட­மி­ருந்து 2008 ஆண்டு பிரிந்­தி­ருந்தார்

பிறிட்ஸின் உட­லுக்கு அருகில் வானொலித் தொடர்­பாடல் தொலை­பே­சி­யொன்று காணப்­பட்­டது.

வறட்­சி­யான உப்புத் தன்­மை­யான சமுத்­திரக் காற்று, மிகவும் வெப்­ப­மான கால­நிலை என்­ப­வற்றால் அவரது உடல் மம்மி நிலையில் உருக்குலையாது பேணப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

அவர் எப்போது, எதனால் உயிரிழந்தார் என்பது அறியப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17