(எம்.எம்.மின்ஹாஜ்)

இந்து சமுத்திரத்தின் பொருளாதார மற்றும் நிதி கேந்திர நிலையமாக மாற வேண்டும் என்ற இலங்கையின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற சீன மக்களும் எமது கட்சியும் பூரண ஒத்துழைப்புகளை வழங்கும். 

மேலும் இலங்கையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு சீனாவின் பட்டுபாதை திட்டம் சிறந்த வாய்ப்பாக அமையும் என கமியூனிஸ்ட் கட்சியின் சர்வதேச திணைக்கள உப அமைச்சர் குவோ யெசு தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கமியுனிட் கட்சியின் சர்வதேச திணைக்கள உப அமைச்சர் குவோ யெசு இன்று காலை அலரி மாளிகையில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான நீண்டகால உறவு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் இரு கட்சிகளின் இளைஞர்களை  ஒன்றிணைத்து விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது  தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. 

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கமியூனிஸ்ட் கட்சி வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தமை குறிப்பிடதக்கது.