கடந்த தேர்­தலில் தம்மால் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்டவர் சுதந்­திரக் கட்சி தலை­வ­ராக இருப்­பதை சாத­க­மாக பயன்­ப­டுத்­திக்­கொண்டு சுதந்திரக்கட்­சியை வீழ்த்த ஐக்­கிய தேசியக் கட்சி வியூகம் வகுத்­துள்­ளது என்று முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

எனவே, ஐக்­கிய தேசியக் கட்­சியின் சதி முயற்­சி­யி­லி­ருந்து சுதந்­திரக் கட்­சியை பாது­காப்­பதா அல்­லது ஐ.தே.க.வின் சதி முயற்சியில் சிக்­கி­க்கொண்டு சுதந்­திர கட்சியின் வளர்ச்­சிக்கு முட்­டுக்­கட்­டை­யி­டு­வதா என்­பது குறித்து கட்சி உறுப்­பி­னர்கள் தீர்­மா­னிக்க வேண்­டிய தருணம் வந்­துள்­ள­தெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்

ஷ­வினால் விடுக்­கப்­பட்­டுள்ள ஊடக அறிக்கை ஒன்­றி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த அ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

எனது காலத்தில் நாட்டில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை முன்­னணி கட­சி­யாக மாற்றியமை குறித்து பெரு­மை­ய­டை­கின்றேன்.எனது ஆட்சிக் காலத்­தின் சுதந்­திர கட்­சியின் சக்­தியை அள­விட்டு பார்க்­கின்ற போது அக்­கட்­சி­யி­லிருப்­ப­வர்கள் விலகிச் சென்றால் மட்­டுமே வீழ்த்த முடியும் என்ற மட்­டத்தில் இருந்­தது. அவ்­வாறு விலகிச் சென்ற சிலரின் ஒத்­து­ழைப்பு கிடைத்­தி­ருக்­கா­விட்டால் என்னால் வலுப்­ப­டுத்­தப்­பட்ட சுதந்­திரக் கட்­சியை ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் வீழ்த்­தி­யி­ருக்க முடி­யாது.

எனது ஆட்சி கவிழ்க்­கப்­பட்­டாலும் சுதந்­திரக் கட்சி தலை­வரை ஜனா­தி­ப­தி­யாக அமர்த்தும் அள­விற்கு சுதந்­திர கட்­சியை வலுப்­ப­டுத்­தி­யுள்ளேன். அமைச்­ச­ரவை பொறுப்­புக்­க­ளையும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் சுதந்திரக் கட்­சியும் பங்­கிட்­டுக்­கொண்­டுள்­ளன.ஆனால் தீர்­மா­னங்கள் அனைத்­தையும் ஐக்­கிய தேசிய கட்­சியே மேற்­கொள்­வதால் சுத­ந்திரக் கட்சி ஐ.தே.க.வின் சிறைக்­கை­தி­யா­கி­யுள்­ளது.

ஐ.தே.க.வின் தீர்­மா­னங்­க­ளுக்கு எமது கட்சி உறுப்­பி­னர்­களும் கையு­யர்த்த வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளதை எண்ணி வருந்­து­கின்றேன்.

இந்­தி­யா­வு­ட­னான சீபா ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­திட முற்­பட்ட போது நாட்டு மக்­களும் தொழிற்சங்­கங்­களும் எதிர்த்தமை­யினால் குறித்த ஒப்­பந்­தத்தை கைவிட்டோம். ஆனால் இன்று மக்­க­ளையும் தொழிற்சங்­கங்­க­ளையும் ஒரு பொருட்­டாக கரு­தாமல் ஒப்­பந்தம் கைச்சாத்­தி­டப்­படும் என்ற விதத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ரான பிர­தமர் பேசு­கின்றார்.

இலங்­கைக்கும் இரா­ணு­வத்­திற்கும் எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையின் பரிந்­து­ரை­க­ளுக்கு ஐ.தே.க.வுடன் இணைந்து சுதந்­திரக் கட்­சிக்கும் இணக்கம் தெரி­விக்க நேரிட்­டுள்­ளது. சுதந்­திரக் கட்­சி­யி­ன­ரையும் இணைத்­துக்­கொண்டு தற்­போ­தைய வெளி­நாட்டு நீதி­ப­திகள் மற்றும் சட்ட விற்­பன்­னர்­களை அழைத்து எனது தலை­மை­யி­லான சுதந்­திர கட்சி பெற்­றுக்­கொ­டுத்த யுத்த வெற்­றியின் பங்­கா­ளர்­களை பழி­வாங்­கவே ஐக்­கிய தேசியக் கட்சி முனை­கி­றது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் இந்த சதி முயற்­சி­யி­லி­ருந்து விலகி நிற்க சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­க­ளான பிர­சன்ன ரண­துங்க,திலும் அமு­னு­கம,காந்திகொடி­கார,துமிந்த சில்வா, தன­சிறி ரண­துங்க,செனரத் ஜய­சுந்­தர ஆகி­யோரின் தொகுதி அமை­ப்பாளர் பதவிகள் பறிக்­கப்­பட்­டுள்­ளன.இதனால் யாரு­டைய எதிர்­பார்ப்­புக்கள் நிறை­வேற்­றப்­ப­டு­கின்­ற­தென சகல கட்­சி­களும் சிந்­திக்க வேண்டும்.

அதேபோல் சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­க­ளுடன் இருக்­கின்ற ஐக்­கிய தேசிய கட்­சியை எதிர்க்கும் தரப்­பி­னரை போலி குற்­றச்­சாட்­டுக்­களின் பேரில் விசா­ர­ணை­க­ளுக்கு அழைத்துச் சென்று அல்­லல்­ப­டுத்தும் போதும் அர­சாங்க தரப்பில் உள்ள சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் மௌனித்­தி­ருக்க வேண்­டிய நிலை தோன்­றி­யுள்­ளது.

இந்­நி­லையில் இது சுதந்­திரக் கட்­சியை வீழ்த்த ஐக்­கிய தேசிய கடசி முன்­னெ­டுக்கும் சதி முயற்சி என்­பது தெளி­வா­கின்­றது. அதனால் தம்மை முடக்கும் ஐக்­கிய தேசியக் கட்சி முக்­கி­யமா அல்­லது தம்மை பாராளுமன்ற உறுப்பினர்களாக்கிய சுதந்திர கட்சி ஆதரவாளர்கள் முக்கியமா என தேசிய அரசாங்கத்தில் இணைந்துள்ள சுதந்திரக் கட்சியினர் தீர்மானிக்க வேண்டிய சூழ்நிலை தோன்றியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி வாக்காளர்களால் தெரிவாகியிருந்தாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர கட்சியையும் கட்சியின் கொள்கைகளையும் பாதுகாப்பார் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்தவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளமை வருந்தக் கூடிய விடயமாகும்.