நிறமூட்டப்பட்ட தரமில்லாத பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான தரமற்ற பருப்பு வகைகள் இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த பருப்பை கழுவும் போது நீர் சிவப்பு நிறமாக மாறுவதுடன் இந்த பருப்பை வேகவைக்க வழமையைவிட கூடுதலான நேரம் எடுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அச் சங்கம், இவ்வாறான பருப்பு வகை விற்பனை செய்பவர்களை இணங்காணுமிடத்து  பிரதேசத்தில் உள்ளபொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு முறையிடுமாறும் அறிவுறுத்தியுள்ளது.