(எம்.மனோசித்ரா)

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரச வங்கியொன்றில் 15 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் 1000 ரூபா நாணயத்தாள் ஒன்றிணை காசு கருமபீடத்தில் வழங்கி அதனை மாற்றித் தருமாறு வங்கி அதிகாரியிடம் கோரியுள்ளார். இதனையடுத்து அதிகாரி பணத்தை மாற்றும் சந்தர்ப்பத்தில் அவரது கரும பீடத்திலிருந்து 15 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். 

இதன் பின்னர் சம்பவம் தொடர்பாக வங்கி அதிகாரிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைவாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 32 வயதுடைய பொரல்லஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவரை கல்கிஸை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் கல்கிஸை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.