நிர்­வாண தியானம் மற்றும் நிர்­வாண ஊர்­வலம் நடத்­திய சாமியார் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

மனை­வியை பிரிந்து தனி­யாக வசிக்கும் நாமக்கல் மாவட்டம், பர­மத்தி வேலூரை அடுத்த பொத்­தனூர் வடக்கு தெருவைச் சேர்ந்த 50 வய­தான வெங்­க­டாச்­சலம் வேலூரில் கைரேகை மற் றும் ஜாதகம் பார்த்து வரு­கிறார்.

கடந்த சில நாட்­க­ளாக அவர் வீட்டில் இரவு நேரத்தில் சத்­த­மாக பக்தி பாடல் பாடு­வது, வீட்­டுக்­குள்ளே குதித்து, குதித்து ஆடு­வது, சுவரை எட்டி உதைப்­பது, நிர்­வா­ண­மாக கண்­களை மூட்டி தியானம் செய்து கொண்டே வீட்டின் முன் நடந்து வரு­வது போன்ற செயல்­களில் ஈடு­பட்டு வந்­துள்ளார்.

தான் ஒரு சித்தர் என கூறிக்­கொண்டே நிர்­வாண பூஜை செய்யும் வெங்­க­டா­சலம் மீது நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என அப்­ப­குதி பெண்கள் வேலூர் பொலி­ஸா­ரிடம் கொடுத்த முறைப்­பாட்டின் பேரில் உதவி ஆய்­வாளர் சண்முகம் நிர்வாண சாமியாரை கைது செய் துள்ளார்.