அமைச்சர் சரத்பொன்சேகாவின் நெருங்கிய சகாவொருவர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என ஐலன்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொட பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் என அழைக்கப்படும் அருண சாந்த அத்தநாயக்க என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார் அவரிடமிருந்து 8 கிராம் ஹெரோயினும் தடைசெய்யப்பட்ட ஐ.எஸ். என்ற பொருள் 2 கிராமும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட நபர் பேலியகொட பகுதியில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்தார் பல துப்பாக்கி சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.