நேற்றைய தினம் தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியின் போது ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாக 10 பேரை கைதுசெய்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவத்தின் போது மைதானத்தின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி உட்பட இரண்டு பேர் காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் இந்த அசாதாரண சூழ்நிலைக்கான காரணம் என்னவென்று இன்னும் கண்டறியப்படதாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.