திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காயத்திரி அம்மன் ஆலயத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலத்தின் முழங்கால்கள் மடக்கப்பட்டு,  உருகுலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 60 - 70 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 10 அடி தூரத்தில் செருப்பும், 30 அடி தூரத்தில் கைக்குட்டை மற்றும் மேலாடையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மேலாடையில் திருகோணமலையில் இருந்து கண்ணியாவுக்கு சென்ற பஸ் டிக்கட் ஒன்றும் காணப்பட்டுள்ளது.

குறித்த நபரை இனந்தெரியாத யாரேனும் கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.