முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்துக்குள் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் அத்துமீறி நுழைந்தமையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது .

சட்டவிரோத மீன்பிடியை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மீனவர்கள் அத்துமீறி கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்துக்குள் தற்போது புகுந்துள்ளனர்.

பொலிஸார் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிவருகின்ற நிலையில், மேலதிக பொலிஸாரை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து வரவழைத்து  கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.