முதல் நாள் ஆட்டத்தில் 285 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து

Published By: Vishnu

02 Aug, 2018 | 10:14 AM
image

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

இந்திய, இங்கிலாந்து அணிக்களுக்கிடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்றைய தினம் எட்ஜ்பஸ்டன் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி 3.30 மணிக்கு ஆரம்பமானது.

போட்டியில் நாணைய சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இதன்படி குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். 9 ஆவது ஓவரில் அஸ்வின் பந்து வீச குக் 13 ரன்களை எடுத்த நிலையில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஜென்னிங்ஸ் உடன் அணித் தலைவர் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய பந்து வீச்சாளர்களால் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் அரைசதம் அடித்தார். 43 ரன்னைத் தொடும்போது டெஸ்ட் போட்டியில் ஆறாயிரம் ஓட்டங்களை தொட்டர் ஜோ ரூட். அத்துடன் டெஸ்ட் போட்டியில் குறைந்த நாட்களில் ஆறாயிரம் ஓட்டங்களை தொட்டு வேகமாக அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

அதையடுத்து இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்கிக்கை 88 ஆக இருந்த போது ஆரம்ப துடுப்பாட்டக்காரராக களமிறங்கிய ஜென்னிங்ஸ், முகமது ஷமி வீசிய 35-வது ஓவரின் முதல் பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். அவர், 4 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 42 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தார். இவரையடுத்து  வந்த மாலன் 8 ஓட்டங்களுடன் ஷமி பந்து வீச்சில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 112 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அடுத்து, ஜோ ரூட்டுடன், பய்ர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். ஒரு கட்டத்தில் இவர்களை வீழ்த்த இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் வகுத்த வியூகங்கள் தோற்றுப் போக  இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் குவித்தனர்.

அதையடுத்து அணித் தலைவர் ஜோ ரூட் 80 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ரன் அவுட் மூலம் ஆட்டமிழக்க, பய்ர்ஸ்டோ, உமேஷ் யாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து, அடுத்து களமிறங்கிய பட்லர் டக்கவுட் முறையிலும், பென் ஸ்டோக்ஸ் 21 ஓட்டங்களுடனும் அஷ்வின் வீசிய சுழலில் சிக்கி ஆட்டமிழந்தனர். 

இறுதியாக இங்கிலாந்து அணி முதல் நாள் இன்னிங்ஸின் ஆட்ட நேர முடிவின் போது 88 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

சம் குரன் 24 ஓட்டங்களுடனும், அண்டர்சன் ரன் ஏதும் அடிக்காமலும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந்திய அணி சார்பாக அஷ்வின் 4 விக்கெட்டுக்களையும் ஷமி 2 விக்கெட்டுக்களையும் உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இன்று போட்டியின் இரண்டாவது நாளாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58