அட்டக்கத்தி,மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பா ரஞ்சித், அடுத்ததாக ஹிந்தி படத்தை இயக்கி, பொலிவூட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

உலகப் புகழ் பெற்ற ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியை பியான்ட் த க்ளவுட்ஸ் என்ற படத்தை இயக்கி பொலிவட்டில் அறிமுகம் செய்த நமா பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள், அடுத்ததாக தயாரிக்கும் இந்தி படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் பா ரஞ்சித்திற்கு வழங்கியிருக்கிறார்கள்.

பீரியட் ஃபிலிமாகவும், உண்மை சம்பவத்தை தழுவியும் எடுக்கப்படவிருக்கும் குறித்த படத்தின் பெயர் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுப்பர் ஸ்டாரை வைத்து அடுத்தடுத்து இரண்டு வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் பா ரஞ்சித் இந்தியில் இயக்குநராக அறிமுகமாவது அவருடைய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.