யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவுகுட்பட்ட பகுதிகளில்  இனந்தெரியாத நபர்கள்  அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக  அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வட்டு தெற்கு, முதலிகோவிலடியில் நேற்றிரவு 11.30 மணியளவில் வாகனச் சத்தம் கேட்டதாகவும் பின்னர் வீட்டின் மேல் நடந்து திரியும் சத்தம் கேட்டபோது வெளிச்சத்தை பாய்ச்சி தேடியவேளை ஒரு நபர் நடப்பதுபோன்று இருந்ததாகவும் இதனைத் தொடர்ந்து வீட்டிலுள்ளவர்கள கூச்சலிட்டபோது வீட்டின் மேலிருந்த நபர் தப்பிச் சென்றுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

இதேவேளை இதற்கு முதல் நாள் இப்பகுதியில் கிராமத்திற்குள் புதிதாக சில நபர்கள் நடமாட்டம் இருந்ததாகவும் மக்கள் குறைவாக உள்ள பகுதிகளில் இவ்வாறானவர்கள் நடமாடித் திரிந்துவிட்டு நள்ளிரவு வேளையில் கற்கள் எடுத்து வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்குத் தெரிவித்ததையடுத்து பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதேவேளை கடந்த இரண்டு வாரமாக இவ்வாறான சம்வம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குள் குறிப்பாக அராலிப் பகுதியில் இடம்பெற்று வருவதாக இங்கு குள்ள மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.