(எம்.மனோசித்ரா)

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி  மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை  கொள்வனவு செய்யும் போது பல்வேறு சிரமங்களை  எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே அவ்வாறான சிக்கல்களை தடுக்கும் நோக்கில் மின்சார சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

அதன்படி 2013 ஆம் ஆண்டு இலக்கம் 31 சட்டத்தின் மூலம் சட்டத்தில் திருத்தப்பட்ட 2009 இலக்கம் 20 இன் கீழான இலங்கை மின்சார சட்டத்தைத் திருத்துவதற்காக  கிடைக்கப்பெற்றுள்ள திருத்த சட்டமூலம் அரசாங்கத்தின் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது. 

தொடர்ந்து அதற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்காக குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.