1000 சீசீ எஞ்சின் வலுவைவிட குறைந்த வாகனங்களுக்குரிய உற்பத்திவரி அதிகரிக்கப்பட்டதையடுத்து குறித்த வாகனங்களின் விலைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளன.

நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, 1,000 சீசீ எஞ்சின் வலுவை விட  குறைந்த சாதாரண வாகனம் ஒன்றிற்கான இறக்குமதி வரி 100,000 ரூபாவாலும், 1,000 சீசீ எஞ்சின் வலுவை விட  குறைந்த ஹைபிரிட் வாகனம் ஒன்றிற்கான இறக்குமதி வரி 400,000 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் படி 1,000 சீசீ எஞ்சின் வலுவை விட  குறைந்த சாதாரண வாகனம் ஒன்றின் விலை 1.5 மில்லியன் ரூபாவாலும், 1,000 சீசீ எஞ்சின் வலுவைவிட  குறைந்த ஹைபிரிட் வாகனம் 1.25 மில்லியன் ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் 2018 ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் கடன் பத்திரம் ஆரம்பிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தயாரிக்கப்படுகின்ற வாகனங்களுக்கு குறித்த வரி அதிகரிப்பானது தாக்கம் செலுத்தாது எனபது குறிப்பிடத்தக்கது.