(இராஜதுரை ஹஷான்)

"தேசிய அரசாங்கத்தில் இடம் பெற்ற மத்திய வங்கியின் பினைமுறி விவகாரத்தினை பெரிதுப்படுத்தி பேசியவர்கள் மிஹின் லங்கா விமான சேவை மற்றும்  ஸ்ரீ லங்கன் எயார்லைன் விமான சேவையில் 2006ஆம் ஆண்டு இடம் பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் அமைதி காப்பது வேடிக்கையாகவே காணப்படுகின்றது" என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரனை நடவடிக்கைகளின்  காலவரை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டதன் மூலம் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

குறித்த ஆனைக்குழவின் விசாரனைகள்   2018 ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் நிறைவடையவிருந்த காலத்தை 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஜனாதிபதி ஆணைக்குழு 2018 பெப்ரவரி   மாதம் 31 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியில் இருந்து இவ்வருடம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் குறித்த நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்காகவே இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு வரையில் இந் நிறுவனங்களில் இடம் பெற்ற  பாரிய மோசடிகள் மூடி மறைக்கப்பப்பட்டிருந்ததும். 2015ற்கு பிறகே வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது. தேசிய அரசாங்கத்தில் இடம் பெற்ற பினைமுறி விவகாரத்தை கொண்டு அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துபவர்கள் இம்மோசடி தொடர்பில் இதுவரை காலமும் அமைதி காப்பது  மாறுப்பட்டதாகவே காணப்படுகின்றது.

தேசிய அரசாங்கத்தில் இடம் பெற்ற மோசடிளை நாம் மூடி மறைக்கவில்லை. சுயாதீனமான விசாரனை குழுவை அமைத்து இன்று வரை இதற்கான தீர்வு நடடிவக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். பினைமுறியுடன் தொடர்புபட்டவர்கள் இன்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். முக்கிய  குற்றவாளி விரைவில் சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தப்படுவார். பினைமுறி விவகாரத்தில் மாத்திரம் தேசிய  நிதி தொடர்பில் அக்கறை கொள்பவர்கள் . விமான சேவை நிறுவனங்களில் இடம் பெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் தேசிய அரசாங்கத்திற்கு  அழுத்தம் கொடுக்காமல் இருப்பது பாரிய சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது.

பினைமுறி விவகாரத்தினை விசாரிக்க  அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஜனாதிபதி  விசாரனை ஆனைக்குழுவை போன்று கடந்த காலத்தில் எவ்விதமாக  ஊழல் விசாரனை ஆனைக்குழுக்களும் அமைக்கப்படவில்லை. இதுவே இரண்டு அரசாங்கத்திற்கும்  இடையிலான பாரிய வேறுப்பாடு என தெரிவித்தார்.

நாட்டு மக்கள் சிறந்த நிர்வாகம் எது என்ற விடயத்தை புரிந்துக் கொள்ள வேண்டும். அரசாங்கம் என்றால் குறைப்பாடுகள் காணப்படுவது சாதாரண விடயமாகும். தேசிய அரசாங்கம் ஒன்றும் விதிவிலக்கல்ல.

ஆகவே குறைகளை திருத்திக் கொண்டு எதிர்ப்புக்களை எதிர்கொள்ள வேண்டும். வெளியக நடவடிக்கைகளை பார்த்து அரசியல் தீர்மானங்களை மக்கள் மேற்கொள்ளாமல். உள்ளக விவகாரங்களை அறிந்து அரசியல் தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.