நாடு முழு­வதும் அளப்­ப­ரிய சேவை வழங்கி வரும் இலங்கை வங்கி இன்று    79 ஆவது ஆண்டு நிறைவை தனது பிர­தான காரி­யா­லய வளா­கத்தில் கொண்­டா­டு­கின்றது. 

இந்­நி­கழ்வில் இலங்கை வங்­கியின் நிறை­வேற்று அதி­காரி, பொது முகா­மை­யாளர், பணிப்பாளர் சபை உறுப்­பி­னர்கள் மற்றும் வாடிக்­கை­யா­ளர்கள், நலன்விரும்­பிகள் ஆகியோர் கலந்து சிறப்­பிக்­க­வுள்­ளனர். 

மேலும் இலங்கை வங்­கி­யா­னது கடந்த 78 வரு­டங்­க­ளாக நாட்டின் பிர­ஜை­க­ளுக்கு தனது நிக­ரற்ற சேவை­களை வழங்கி வரு­வ­துடன் இலங்­கையில்  சிறந்த வங்­கி­யா­கவும் திக­ழு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. 

அத்­துடன் இவ்­வங்கி புதிய பரி­ணா­மத்­துடன் தனது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சில்­லறை, மொத்த, சர்­வ­தேச, முத­லீட்டு வங்­கி­யியல், பல்­வே­று­பட்ட சேவைகள், கட­னட்டை வசதி, வர­வட்டை வசதி, நகை அடகு சேவை, ஸ்மார்ட் இணை­யத்­தள வங்கிச் சேவை, போன்ற பல்­வேறு சேவை­களை வழங்­கு­கின்­றது. புதிய தொழில்­நுட்ப வளர்ச்­சிக்­கேற்­பவும் வாடிக்­கை­யா­ளர்­களின் வச­திக்­கேற்­பவும் தமது சேவை­களை டிஜிட்டல் தொழில்­நுட்பம் மூலம் விரி­வு­ப­டுத்­தி­யுள்­ளது. சிறந்த மற்றும் நேர்த்­தி­யான வாடிக்­கை­யாளர் சேவையின் மூலம் சுமார் 12 மில்­லியன் வாடிக்­கை­யா­ளர்­களை தன்­ன­கத்தே கொண்­டுள்­ளமை சிறப்­புக்­கு­ரி­ய­தாகும். 

2018 ஆம்  ஆண்டு  இலங்கை  வங்­கி­யா­னது  தனது குறி­யீட்டுப் பெறு­ம­தியை  ரூபா  42.87  பில்­லியன்  ஆக  அதி­க­ரித்­துள்­ள­தாக பிராண்ட் பினான்ஸ் லங்கா தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ளது. இறு­தி­யாக இலங்கை  வங்­கியின்  பணிப்­பா­ள­ரான ரொனால்ட் சீ பெரேரா இலங்கை வங்­கியின் வெற்­றிக்கு கைக்­கொ­டுத்த வாடிக்கை­யா­ ளர்கள், இலங்கை அர­சாங்கம்,  இலங்கை  வங்­கியின்  ஊழியர்கள்,  நலன் விரும்பிகள் மற்றும் தம்முடன் இணைந்து சேவையாற்றிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள் வதாக குறிப்பிட்டுள்ளார்.