பிரான்ஸ் நாட்டில் கலே பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த அகதிகளின் குடியிருப்புக்களை அகற்றச்சென்ற பொலிஸாருக்கும் அகதிகளுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதால் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அகதி மக்களின் எதிர்ப்பையும் மீறி பொலிஸ் அகற்ற முற்பட்ட வேளையில் இந்த குழப்பநிலை ஏற்பட்டது.

இதன்போது, அகதிகள் பொலிஸார் மீது கற்பிரயோகத்தை மேற்கொண்டதிற்கு எதிராக அவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் தாரை பிரியோகித்தனர்.

மேலும் 23 அகதிகளை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.