பிரபல சிங்கள நடிகர் லோயிட் குணவர்தன விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழக்கும் போது அவரின் வயது 55 ஆகும்.

விபத்தில் படுகாயமடைந்த அவர் ராகமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுமார் மூன்று தசாப்தங்களாக தொலைக்காட்சித் தொடர்களிலும் மற்றும் மேடை நாடகங்களில் அவர் நடித்து புகழ்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரின், பூதவுடல் தற்போது கொலன்னாவையில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.