வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று மாலை 6.30 மணியளவில் இ.போ.ச பஸ் ஒன்றை வெளிச்செல்லவிடாது தனியார் பஸ்கள் தரித்து நின்றமையினால் சற்று பரபரப்பான நிலை காணப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா புதிய பஸ் நிலையத்தினுள் வெளி இடங்களிலிருந்து வேறு மாவட்டத்திற்கு செல்லும் பஸ்கள் உட்பிரவேசிப்பதற்கு தடை பிறப்பிக்கப்பட்டதோடு, புதிய பஸ் நிலையத்தினுள் இ.போ.ச, தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டன.
இந் நிலையில் இன்றைய தினம் வெளி இடத்திலிருந்து வேறு மாவட்டத்திற்கு செல்லும் இ.போ.ச பஸ் புதிய பஸ் நிலையத்தினுள் சென்று தரித்து நின்று பயணிகளை ஏற்றியமையினால் தனியார் பஸ் ஊழியர்கள் புதிய பஸ் நிலையத்தின் பஸ்கள் வெளிச்செல்லும் பாதையில் தங்களது பஸ்களை தரித்து இ.போ.ச பஸ்ஸை வெளிச்செல்ல விடாது முற்றுகையிட்டனர்.
இதனால் புதிய பஸ் நிலையத்தில் சற்று பரபரப்பான நிலை காணப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் போக்குவரத்துக்கு இடையூராக தரித்து நின்ற தனியார் பஸ் சாரதிகளுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியமை என்ற குற்றச்சாட்டில் அவர்களுக்கு தண்டப்பத்திரம் வழங்கப்பட்டதுடன் நீதிமன்றத்திற்கு செல்லுமாறு பணித்தனர்.
இதன் பின்னர் தற்போது புதிய பஸ் நிலையத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM