கிளிநொச்சி முழங்காவில் அன்புபுரம் பிரதேசத்தில் 13 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது கயிறு இறுகியதில் குறித்த சிறுவன் பலியாகியுள்ளார்.
அன்புபுரம் பகுதியில் உள்ள மூன்று பெண் சகோதரிகளுக்கு மூத்த பிள்ளையான குறித்த சிறுவன் பாடசாலை முடித்து வீடு திரும்பி இரு தங்கைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கையில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
வழமையாக குறித்த பகுதியில் விளையாடுவதாகவும், அவ்வாறே இன்றும் விளையாடிக்கொண்டிருக்கையில் அங்குள்ள கொய்யா மரம் ஒன்றில் விளையாட்டுக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் இறுகி சிறுவன் உயிரிழந்துள்ளார். என பெற்றோர் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது சிறுவனை தாய் மற்றும் சகோதரிகள் மீட்டு அயலவர்களின் உதவியுடன் முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
தற்போது சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM