ஜப்பான் நாட்டை இந்த மாதத்தில் தொடர்ந்து தாக்கிய மழை, வெள்ளம், வெப்பம் மற்றும் புயலால் 300 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 

ஜப்பான் நாட்டின் பல பகுதிகளில் இந்த மாதத்தின் முற்பகுதியில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மணிசசரிவில் சிக்கி 220 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

இதனைதொடர்ந்து, கடந்த வாரத்தில் இருந்து ஜப்பானின் பல மாகாணங்களை வறுத்தெடுத்துவரும் 104 டிகிரி வெயிலின் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் 116 பேர் மாரடைப்பு மற்றும் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து சமீபத்தில் வீசிய புயலில் சிலர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த மாதத்தில் மட்டும் ஜப்பானில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் கடந்த 1982 ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்நாடு சந்தித்துள்ள மிகப்பெரிய பேரழிவாகும் என உள்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.