முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணிக்கு அப்பாலுள்ள தமிழர்களின் பூர்வீக பகுதியான சிவந்தா முறிப்புக்குளம் மற்றும் அதனோடிணைந்த வயல் நிலங்களை அபகரிக்கும் முயற்சி நேற்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில். சிவந்தா முறிப்புக்குளம் மற்றும் அதனோடு இணைந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான வயல் நிலங்களை சிங்கள மக்கள் சிலர் அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதனை கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பினர் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனுக்கும், முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினருக்கும் தெரியப்படுத்தியிருந்தனர்.
உடனடியாக குறித்த இடத்திற்குச் சென்ற வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் திரு.கிருசுணன் – ஜெகன்நாத் மற்றும் திணைக்கள பணியாளர்களும் சென்று இந்த அபகரிப்புச் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்தினர்.
மேலும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கும் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளருக்கும் இது தொடர்பில் தொலைபேசியில் ரவிகரனால் தெளிவுபடுத்தப்பட்டது.
அத்துடன் குறித்த இடத்திற்கு கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் திரு.இ.பிரதாபன், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பிராந்திய திட்ட முகாமையாளர் திரு.வி.கே.பி.ஜெயநாத ஆகியோரும் குறித்த இடத்திற்கு வருகைதந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் 29 ஆம் திகதி குறித்த பகுதிக்கு வடக்குமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் நேரடியாக சென்று நிலைமைகளை ஆராய்ந்திருந்து அபகரிப்பு நடவடிக்கையை நிறுத்துமாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM