சிறைக்கைதிகளை சோதனையிடுவதற்கு பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் படையினரை பயன்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு சிறைக்கைதிகளை பாதுகாப்பதற்கான இயக்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
சிறைக்கைதிகளை சோதனையிடுவதற்கு பயிற்றுவிக்கப்பட்ட சிறைச்சாலை ஊழியர்களை மாத்திரம் பயன்படுத்தவேண்டும் என் சிறைக்கைதிகளை பாதுகாப்பதற்கான குழு கருத்து வெளியிட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிறைக்கைதிகளை பாதுகாப்பதற்கான குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா இலங்கை அரசாங்கத்திற்கு இந்த விடயத்தில் சர்வதேச கடப்பாடுகள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் தங்கள் பணிகளை சிறப்பாக முன்னெடுப்பதற்காக அவர்களிற்கு வளங்களை வழங்கவேண்டும்,சட்டத்தின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளிற்கு சோதனையிடுவதற்கான அனுமதியை வழங்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொலிஸாரோ அல்லது படையினரோ சிறைக்கைதிகளை சோதனையிடுவதற்கு அரசமைப்பிலோ அல்லது சிறைச்சாலை சட்டத்திலோ இடமில்லை என சிறைக்கைதிகளை பாதுகாப்பதற்கான குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.
பயிற்றுவிக்கப்படாதவர்களையும் சிறைக்கைதிகளை எவ்வாறு கையாள்வது என்பதை அறியாதவர்களையும் பயன்படுத்தினால் 2012 வெலிக்கடையில் இடம்பெற்ற சம்பவங்கள் இடம்பெறலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM