அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர்  ஜாலிய விக்ரமசூரியவை கைதுசெய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இந்த பிடியாணையை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்தது.

அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரக காரியாலயத்திற்கு கட்டிடமொன்றை பெற்றுக்கொள்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரான ஜாலிய விக்கிரமசூரியவுக்காக பிணை நின்ற அவரின் மனைவி மற்றும் அவரின் சகோதரிக்கும் மீண்டும் பிடியாணை பிறப்பிப்பதாகவும் கோட்டை பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம்  திகதி மீள விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.