ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும்  நவலபிடியிலிருந்து கினிகத்தேன நோக்கி பயணித்த பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து இன்று காலை 06.45 மணி அளவில் கினிகத்தேன பிரதான வீதியின் இரண்டாம் கட்டைபகுதில் உலங்கஸ்ஹின்ன பகுதியில்  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது

நாவலபிட்டியில் இருந்து கினகத்தேன பகுதிக்கு சென்ற தனியார் பஸ் அதிகவேகத்தின் சென்று குறித்த பகுதியில் லொறி ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நாவலபிட்டியில் இருந்து கினிகத்தேன நோக்கி பயணித்த பஸ்ஸின் சாரதி நாவலபிட்டி பொலிஸாரினால்  கைது செயய்யப்பட்டுள்ளார்.

குறித்த பஸ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.