முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ள ஒன்றிணைந்த அணியினரின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பில் அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

16 பேர் கொண்ட இந்த அணியின் சார்பாக எஸ்.பி.திஸாநாயக்க, ஜோன் செனவிரட்ண மற்றும் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இந்த சந்திப்பின் போது தேர்தல் மற்றும் அரசியலமைப்பு தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.