தாய்லாந்தில் ஷியாங் ரே (Chiang Rai) என்ற இடத்தில் முதலைப் பண்ணையில் வேலை பார்த்து வருபவர் தாவோ (Tao). இவர் முதலையின் வாய்க்குள் தனது கையை நுழைத்து சாகசம் செய்து வந்தார்.

அதேபோல் நேற்றும் வழக்கம் போல் முதலையின் வாய்க்குள் தனது கையை முழுமையாக நுழைத்து சாகசம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக தாவோவின் கையை முதலை கடித்து குதறியது. இதில் மயிரிழையில் உயிர் தப்பிய தாவோவின் கை முறிந்தது.