பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி செயலாளரின் கையெழுத்துடன் தன்னை அப் பதவியில் இருந்து நீக்கியுள்ளதிற்கான கடிதம் கிடைத்துள்ளதாகவும்,எனினும் பதவி நீக்கத்துக்கான காரணம் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை எனவும் லெசில் டி சில்வா தெரிவித்தார்.