இலங்கை இராணுவத்தினர் வெடிபெருட்களைக் கண்டறிவதற்காக கீரிப்பிள்ளைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

பொறியியல் படையின் கீழ் 14 ஆவது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணு ஆயுத படைப்பிரிவின் கீழ் பயிற்சியளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பயிற்சிக்காக இலங்கையில் உள்ள சாம்பல் நிறமுள்ள கீரிகளே பொருத்தமானவை என்றும், பெண் கீரிகளுக்குப் பயிற்சி அளித்தால் அது நன்மை தரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நாய்களை விட நிலைக்குத்தான தளங்களில் மோப்பங்களை மேற்கொள்வது கீரிகளுக்கு சுலபமானது எனவும் பயிற்சியளிக்கும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

15 வருடங்கள் கீரிகள் உயிர்வாழக் கூடியவை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக சாம்பல் நிறமுடைய பெண் கீரிகள் தான் மோப்பம் நடவடிக்கைகளுக்க சிறந்தவையென அவற்றுக்கு பயிற்சி வழங்கும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

கீரிகளுக்கு மோப்பம் தொடர்பான பயிற்சியளிப்பது தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினர் இதனை மினவும் வெற்றிகரமாக நிறைவேற்றியிருப்பதாகவும் தெரிவித்தனர்.