கடந்த காலத்தில் ஏவுகணைகளை தயாரித்த அதேபகுதியில் வடகொரியா ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக வாசிங்டன் போஸ்ட்டிற்கு அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகரிற்கு அருகில் உள்ள பகுதியில் இரு கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகளை தயாரிக்கும் நடவடிக்கையில் வடகொரியா ஈடுபட்டுள்ளது என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை இலக்கு வைக்கும் விதத்தில் வடகொரியா தயாரித்த முதல் ஏவுகணை குறிப்பிட்ட பகுதியிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரியா புதிய ஏவுகணைகளை தயாரிக்கும் நடவடிக்கைகளில் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்பதை உறுதி செய்ய முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட பகுதியில் வாகனங்கள் நடமாடுவதை காண்பிக்கும் செய்மதி புகைப்படங்களை ரொய்ட்டர் செய்தி சேவை வெளியிட்டுள்ளது.