(நா.தினுஷா)

புல­மைப்­ப­ரிசில் பரீட்சை எதிர்­வரும் 5 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ள­துடன் க.பொ.த. உயர்­த­ரப்­ப­ரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் செப்­டம்பர் மாதம்  முதலாம் திக­தி­ வரை நடை­பெ­ற­வுள்­ளது. ஆகவே பரீட்­சை­களில் பங்­கு­பற்றும் மாண­வர்­க­ளுக்­கான மேல­திக வகுப்­புக்கள்  மற்­றும் கருத்­த­ரங்­கு­களை  நடத்­து­வ­தற்கு இன்று முதல் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ள­தாக பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் சனத்  பூஜித் தெரி­வித்­துள்ளார்.  

பரீட்சை நிலை­யங்­களில் இடம்­பெறும் ஊழல்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கென விசேட கண்­கா­ணிப்புக்குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பரீட்சை நிலை­யங்­களில் கைய­டக்கத் தொலை­பேசி உள்­ளிட்ட தொழி­ல்நுட்பப் பொருட்­களை பயன்­ப­டுத்­து­வ­தற்குத்  தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ள­துடன்  பரீட்சை  ஒழுங்­கு­களை மீறு­கின்றவர்கள்  மீது  நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மெ­னவும்  அவர்  குறிப்­பிட்­டுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, 

புல­மைப்­ப­ரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்­தரப் பரீட்சை  மாண­வர்­க­ளுக்­கான  மேல­திக வகுப்­புக்கள் மற்றும் கருத்­த­ரங்­கு­களை நடத்­து­வ­தற்கு இன்று  முதல் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. 

எதிர்­வரும் 5 ஆம் திகதி தரம்–5 மாண­வர்­க­ளுக்­கான புல­மை­ப்ப­ரிசில்  பரீட்சை  நடை­பெ­ற­வுள்­ளது. புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையை நடத்­து­வ­தற்­கென நாடு முழுவதும் 3,050 பரீட்சை நிலை­யங்கள்  நிறு­வப்­பட்­டுள்­ள­துடன்  அன்று நாள்  முழு­வதும் பரீட்சை  கண்­கா­ணிப்பு  நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும். 

ஆகஸ்ட் மாதம்  6  ஆம் திகதி முதல் செப்­டம்பர் மாதம்  முதலாம்  திகதி வரை க.பொ.த.  உயர்­தரப் பரீட்­சைகள் இடம்­பெ­ற­வுள்­ளன.  பரீட்­சை­களை  நடத்­து­வ­தற்­கான  நட­வ­டிக்­கைகள் அனைத்தும்  முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­துடன்  2,268 பரீட்சை  நிலை­யங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன என்றார்.