யாழில் கிராமசேவகருக்கு வாள் முனையில் அச்சுறுத்தல்

Published By: Vishnu

31 Jul, 2018 | 08:24 AM
image

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கு கிராமசேவகர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது அலுவலகம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. வாள்கள் கம்பிகளுடன் நேற்று பட்டப்பகலில் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் இந்த அட்டூழியத்தை அரங்­கேற்றி தப்­பிச்­சென்­றது. 

இச் சம்வமானது வண்­ணார்­பண்ணை கிழக்கு ஜே 100 கிராம அலு­வ­ல­கரின் அலு­வ­ல­கத்தில் நேற்று  நண்­பகல் 12.20 மணி­ய­ளவில் இந்த அடா­வடிச் சம்­பவம் இடம்­பெற்­றது.

அலு­வ­ல­கத்­துக்குள் புகுந்த கும்பல், கிராம அலு­வ­ல­கரின் கழுத்தில் வாளை வைத்து அச்­சு­றுத்­தி­ய­துடன்  அலு­வ­ல­கத்­தி­லி­ருந்த மடி­க்க­ணணி, கைத்தொ­லை­பேசி  என்­ப­ன­வற்றை அடித்து உடைத்து சேதப்­ப­டுத்­தி­யுள்­ளது. 

மேலும் அலு­வ­ல­கத்­துக்கு முன்­பாக நின்ற முச்­சக்­கர வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும்  பெறு­ம­தி­யான பொருள்­களை அடித்து சேதப்­ப­டுத்­திய கும்பல், அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்­ளது.

சம்­பவம் தொடர்பில் அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இதேவேளை கொக்குவில் வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் அங்கு வீட்டில் தரித்திருந்த வாகனத்தினை அடித்து நொறுக்கி தீ வைத்ததுடன் வீட்டில் உள்ள பெறுமதியான உபகரணங்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. கொக்குவில் ஞான பண்டிதா பாடசாலைக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்தச் சம்பவம் நேற்று நண்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 8 பேர் கொண்ட குழு குறித்த வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன் வீட்டின் ஜன்னல்கள் பெறுமதியான உபகரணங்க ளையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இச் சம்பவம் குறித்தும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20