(இராஜதுரை ஹஷான்)

வடக்கு மக்களின் உண்மை நிலையினையும், பாதிக்கப்பட்ட மக்களின் மனோநிலையினையும் அறிய வேண்டுமாயின் தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கிற்கு விஜயம் செய்து  மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா  மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

வடக்கில் பல உள்ளக பிரச்சினைகள் காணப்படுகின்றது. வெளியில் காணப்படுகின்ற ஒரு சில பிரச்சினைகள் மாத்திரமே தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு தெரிகின்றது. தெற்கில் இருந்துக் கொண்டு வடக்கில் நிர்வாகம் செய்ய முடியாது. இன்றும் வடக்கில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்றது.

வடக்கு பிரதிநிதிகள் என்று நாம் வடக்கின் பிரச்சினைகளை குறிப்பிடும்  போது அவ்விடயங்கள்   தென்னிலங்கையில்   திரிபுபடுத்தப்பட்டு பல்வேறு மாற்று கருத்துக்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே வடக்கின் உள்ளக பிரச்சினைகளை தென்னிலங்கை அரசியல்வாதிகள் அறிய வேண்டுமாயின் விரைவாக வடக்கிற்கு விஜயம் செய்ய வேண்டும் என்றார்.