(நா.தினுஷா) 

பேராதெனிய பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீண்டும் வழமைக்கு திரும்புவதற்கு உயர் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்கலைகழக வளாகத்துக்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுப்போம் என வைத்தியபீட மாணவ பெற்றோர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் இது தொடர்பாக அச் சங்கம்  உயர்கல்வி அமைச்சுக்கும் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த வருடமும் மருத்துவபீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாரிய சிக்கல் நிலையை சந்தித்திருந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் வைத்திய பீட மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை ஒழுங்கான முறையில் மேற்கொண்டிருக்கும் வேலையில் பேராதெனிய பல்கலைகழகம் காலவரையரையின்றி முழுமையாக  மூடப்பட்டுள்ளது. இதனால்  வைத்திய பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. 

எனவே இவ்விடயம் குறித்து உயர்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் நாங்கள் பேராதெனிய பல்கலைக்கழக வளாகத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.