திருகோணமலை நிலாவெளி பகுதியில் 850 கிரேம் கேரளா கஞ்சாவுடன் 58 வயதுடைய வயோதிபரை போதை ஒழிப்பு பிரிவினர் இன்று காலை கைது செய்துள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நிலாவெளி - அடம்போடவெட்டை பகுதியைச் சேர்ந்த தேவ சகாயகம் ஜோன் என பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.