இந்தியாவுக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரின் போது ஐ.பி.எல். போட்டியில் இந்திய அணி வீரர்களுடன் ஏற்பட்ட நட்பு எல்லாம் ஆடுகளத்தில் வெற்றி வேட்கையுடன் களமிறங்கும் போது மறந்து போகும் என இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்ட நாயகன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - இந்திய அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் இது தொடர்பில் கூறிய பட்லர்,
ஐ.பி.எல். தொடரின் போது இங்கிலாந்து, இந்திய அணி வீரர்களுக்கிடையே நட்பு ஏற்பட்டிருக்காம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக நாம் ஆடுகளம் புகும் போது அந்த நட்பினை பார்க்க முடியாது.
சில இந்திய வீரர்களுடன் ஆடியுள்ளேன். ஆனால் களத்தில் அவை மறக்கப்படும். அனைவரும் போட்டி மனப்பான்மையுடன் தான் ஆடுவார்கள். பழகிய முகங்கள் இருக்கலாம், கிரிக்கெட்டை விடவும் கூடுதலாக சிலருடன் பழகியிருக்கலாம், இது நடப்பு கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய விடயமே.
ஆனால் களத்தில் நட்பினை பார்க்க முடியாது. பயிற்சி நாட்கள், உணவு மேசை என்று நட்பு இருக்கலாம். மொஹின் அலி, விராட் மற்றும் சாஹலுடன் ஆடியுள்ளார். அவர்கள் நன்றாகப் பழகியது எனக்குத் தெரியும். ஹர்திக் பாண்டியாவுடன் நான் ஆடியிருக்கிறேன்.
ஆனால் களத்தில் சில நேரம் டெஸ்ட் போட்டியின் தன்மையால் அவையெல்லாம் மறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM