ஆட்­டத்­திறன் மோச­மாக இருக்­கி­றது என முகப் புத்­த­கத்தில் விமர்­சித்த ரசி­கரை மோச­மான வார்த்­தையால் திட்டி மிரட்­டிய பங்­க­ளாதேஷ் வீரர் ஷபீர் ரஹ்மான் தற்­போது சிக்கலுக்குள்ளாகி­யுள்ளார். 

அண்மைய நாட்களில் ஷபீர் ரஹ்மான் தொடர்ந்து மோச­மா­கவே ஆடி வரு­வதால் இவர் மீது விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன.

இதனைய­டுத்து, ரசிகர் ஒருவர் ஷபீரின் மோச­மான ஆட்டம் குறித்து முகப்­புத்­த­கத்தில் பதி­விட்­டுள்ளார். 

அதனைக் கண்ட ரசி­க ரின் நண்பர் ஷபீ­ருக்கு அத னைப் பகிர, கடும் கோபம் கொண்ட ஷபீர் அந்த ரசி­கரை தகாத வார்த்­தை­களால் திட்­டி­ய­தோடு தாக்­குதல் தொடுப்­ப­தாகவும் மிரட்­டி­யுள்ளார். இவ் விவ­காரம் அந்­ நாட்டு கிரிக்கெட் உலகில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யதையடுத்து இது குறித்து

விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.