(எம்.ஆர்.எம்.வஸீம்)
மத்தள விமான நிலையத்தை விற்பனை செய்ய ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். அரசியல் நோக்கத்துக்காகவே இது தொடர்பாக கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்யப் போவதாக எதிர்க்கட்சிகளால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கூறுகையில்,
மத்தள விமான நிலையத்தை விற்பனை செய்வது தொடர்பாக எந்த தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை. விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவே அமைச்சரவைக்கு அமைச்சரவைப் பத்திரம் ஒன்று முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
அவ்வாறு தீர்மானம் ஒன்று எடுப்பதாக இருந்தால் அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொண்டு அதன் பின்னர் பாராளுமன்றத்தின் அனுமதியையும் பெற்றுக்கொண்டதன் பின்னரே இந்தியாவுக்கோ சீனாவுக்கோ அல்லது வேறு நாடொன்றுக்கோ வழ ங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுப்போம். எங்களுக்கு தேவை இந்த
விமான நிலையத்தை அபிவிருத்திசெய்வதாகும். அதன் மூலம் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண் டும்.
அத்துடன் இந்த விமான நிலையத் தில் அதிகமான விமானங்கள் இறக்குவதற்கு தேவையான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால், அது தொடர்பாக அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ள தீர்மானித்தால் அதற்கு நாங் கள் அனுமதிப்போம். எங்களுக்கு தேவை இந்த விமானநிலையம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அத்துடன் அந்த தீர்மானங்கள் நாட்டு க்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது.
மத்தள விமான நிலைய த்தை இந்தியாவுக்கு விற்பனை செய்யப் போவதாக சில அரசியல் குழு வொன்றேபிரசாரம் செய்து வருகின்றது. ஆனால் அரசாங்கம் அது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றார்.