ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் குழப்பநிலையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 11 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். 

இவர்களில் ஆறு தேரர்கள் மற்றும் பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.