மேலதிகமாக கிடைக்கப்பெறும் பழவகை, காய்கறி அறுவடைக் காலங்களில் அவற்றை உலர்த்தி வைப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தவுள்ளதாக, அரசாங்கம் தெரிவிக்கிறது.

லபுதுவ விவசாயப் பண்ணையில் தெற்கு மாகாண விவசாய நவோதய என்ற கண்காட்சியை, நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்தார். 

நாட்டில் இளம் சமூகத்தினரில் 5 சதவீதமானவர்கள் விவசாயத்துறையில் ஈடுபட்டுள்ளனர் எனவும், இளைஞர்களை விவசாயத் துறையில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்று தனியார் துறையினரின் பங்களிப்புடன் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதெனவும், அமைச்சர் தெரிவித்தார்.