வரணி வடக்கில் நேற்யை தினம் இடம்பெற்ற மரண சடங்கின்போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்தார்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதில் ஐவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த இச் சம்பவத்தில், வரணி வடக்கை சேர்ந்த கிட்டினன் தங்கலிங்கம் (வயது 45), சவுந்தராஜ் ராஜ்மிலன் (வயது 29), கந்தசாமி சுரேஸ்குமார் (வயது 31), அறிவழகன் கஜன் (வயது 27), கணபதி நவரட்ணம் (வயது 52) ஆகியோரே கத்தி வெட்டில் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இவர்கள் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.