முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பயிற்சிகளை வழங்கி சுற்றுலாத்துறையில் ஒன்றிணைப்பதற்காக வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இத் திட்டத்தின் கீழான பயிற்சி வேலைத்திட்டம் நாளை திங்கட்கிழமை(28-07-2018) கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பமாகவிருப்பதாகவும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தொழில் பயிற்சி அதிகார சபையின் தலல்ல தேசிய மத்திய நிலையத்தில் நேற்று காலை(28-07-2018) நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும், 120 நாட்களில் நிர்மாணத்துறையில் திறன்மிக்க சிற்பிகளை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டப்பணிகளை ஆரம்பிக்கும் பொருட்டு இவ்வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.