இரணைமடுவில் அமைந்துள்ள பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி திணைக்களத்திற்கு  விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

விவசாயிகளின் உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதன் நோக்கம் கருதி கள விஜயம் அமைந்திருந்ததோடு குறிப்பாக ஆராய்ச்சியாளர்களினால் ஆராய்ச்சி செய்யப்பட்ட மா,நிலக்கடலை,வெங்காயம்,போன்ற விதைகள் விளைதிறனை வழங்குவதோடு விவசாயிகளுக்கு உற்பத்தியை அதிகரிக்கும்.

எனவே விவசாயிகளுக்கு வெகுவிரைவில் பயிர் செய்கைகளை மேற்கொள்ள அறிமுகம் செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளதாகவும் ஆராய்ச்சி அதிகாரிகளினால்  விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதனுக்கு  தெரிவிக்கப்பட்டது. 

யாழ் மாவட்ட ரீதியில் விவசாயிகளினால் பிர

தேச ரீதியாக மண்வள தன்மை  குறித்த கருத்தை விவசாயிகள் பிரதி  அமைச்சருக்கு குறிப்பிட்டிருந்தனர்.

இந்த விடையம் தொடர்பாக  அதிகாரிகளின் நடவடிக்கை குறித்தும்   அவ்வாறான பிரச்சினைகளுக்கு எவ்வாறான அனுமானங்களை ஏற்படுத்தலாம் என விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் கேட்டறிந்திருந்தார்.

அதன் போது அதிகாரி சார்பாக அவ்வாறான பிரைச்சினைகள் காணப்படுவதாகவும் பிரதேச ரீதியாக மண் பகுப்பாய்வுகளை ஏற்படுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.தொடர்பாக மேலதிகமான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் விவசாய பிரதி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.