கார்களின் மயானம் கண்டுபிடிப்பு 

Published By: Raam

01 Mar, 2016 | 02:09 PM
image

இங்கிலாந்து நாட்டில், கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் குவியல் குவியலாக பழைய கார்கள் கண்டுபிடிக்கப்பட்டதுள்ளமை மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

சுரங்கத்திற்குள் நூற்றுக்கும் அதிகமான கார்கள் எப்படி வந்தது என்பது புரியாத புதிராக இருக்கிறது. 

இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் கடந்த 1836 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட கனிம சுரங்கம் ஒன்று, கடந்த 1960 இல் மூடப்பட்டது. இந்த சுரங்கத்தை அந்நாட்டை சேர்ந்த ஆய்வாளர் குழு ஒன்று சமீபத்தில் சென்று பார்த்தார்கள்.

ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்களில் ஒருவரும் மென்பொருள் வல்லுனருமான 31 வயதாகும் கிரிகோரி ரிவோலெட் சுரங்கப்பயணத்தை பற்றி கூறுகையில்,"

கைவிடப்பட்டு 55 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், சுரங்கத்திற்குள் செல்வது மிகுந்த ஆபத்தை தருவதாக இருந்தது. சுரங்கத்தின் மேற்புறத்தில் இருந்த கற்கள் தலையில் விழும் ஆபத்து இருந்தது. மேலும், இருட்டும் வழுக்குத் தரையும் ஆபத்தை அதிகப்படுத்தின.

இருந்தாலும் சுரங்கத்திற்குள் ஏதாவது அதிசயம் இருக்கிறதா என்பதை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில், தரையிலிருந்து 65 அடி ஆழத்திற்கு சரிவாக செல்லும் அந்த சுரங்கத்திற்குள் இறங்கினோம்.

கடும் கஷ்டத்தை எதிர் கொண்டு சுரங்கத்திற்குள் சென்றபோது, முடிவில் குளம் போல் நீர் தேங்கியிருந்தது. அத்துடன், அங்கு நூற்றுக்கும் அதிகமான பழைய கார்கள் குவியல் குவியலாக கிடந்தன.

கார்கள் இங்கு எப்படி வந்தது என்பது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அங்கு இருந்த கார்கள் 45 ஆண்டுகளுக்கும் பழமையான வகைகளான இருக்கின்றன.

சுரங்கத்திற்குள் கார்களை பார்த்ததும், அங்கு அதுதொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டோம். அங்கு சுமார் 4 மணிநேரத்தை செலவிட்டோம்," என்று கிரிகோரி கூறினார்.

சுரங்கத்திற்கு வெளியிலும், உள்பகுதியிலுமாக பல நூறு கார்கள் வந்தது எப்படி என்பது குறித்து உறுதியானத் தகவல் இல்லை. ஆனால், சுரங்கத்திற்கு அருகிலுள்ள பாதை மலைச் பாதையாக மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. அதுவும் மழை சமயங்களில் பாதை வழுக்குத் தரையாக மாறிவிடும். அதுபோன்ற சமயங்களில் வந்த கார்கள் தான் பாதையிலிருந்து தவறி இந்த சுரங்கத்திற்குள் வந்து விழுந்திருக்கும் என கருதுகிறோம்.

தவறி விழுந்த கார்களை மீட்பதும் கடினமாக இருந்திருக்கும். அத்துடன், தவறி விழுந்த கார்களை இதிலிருந்து மேலே கொண்டு வருவதற்கு அதிக செலவு பிடித்திருக்கும் என்பதால், கைவிடப்பட்டு இங்கு அனாதைகளாக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52