கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதி, இயக்ககச்சி வளைவுக்கருகில் நேற்றிரவு மோட்டார் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த சிறுமியின் தந்தை மற்றும் ஏனைய இரு சகோதரர்களும் படுகாயமடைந்த நிலையில் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் சாரதியை கைது செய்துள்ளதோடு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.