வடமாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியாவில் நடமாடும் சேவை இன்று இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட பாடசாலைகள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களது தேவைகள், குறைபாடுகள் தொடர்பில் குறித்த நடமாடும் சேவையில் கவனம் செலுத்தப்பட்டது. 

வவுனியா வடக்கு வலயத்தின் நடமாடும் சேவை காலையிலும், வவுனியா தெற்கு வலயத்தின் நடமாடும் சேவை மாலையிலும் நடைபெற்றது. 

குறித்த நடமாடும் சேவையில் வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடமாகாண கல்விப் பணிப்பாளர், வலயக்கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்வி அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.