இராவணன் புகழ்பாடும் சம்பந்தன்

Published By: Vishnu

28 Jul, 2018 | 04:21 PM
image

சரித்திர ரீதியான ஆய்வுகள் நடத்தி எமது வரலாற்றை ஆவணப்படுத்தி வெளியிடுவது இன்றைய கால கட்டத்தின் மிக முக்கியமான தேவையாகவுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

என்.கே.எஸ்.திருச்செல்வம் எழுதிய 'யார் இராவணன்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

1624 ஆம் ஆண்டு போத்துக்கேயரால் திருக்கோணேஸ்வரர் ஆலயம் உடைக்கப்பட்டபோது இவ் ஆலயத்தில் ஒரு பகுதியாக இருந்த 1000 கால் மண்டபத்தை உடைத்தே தற்போதுள்ள பிரட்ரிஸ் கோட்டை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் சமுத்திரத்தின் அடியில் ஆலயத்தின் பல சிதைவுகளும் வரலாற்று உண்மைகளும் புதையுண்டு உள்ளது. எனவே இந்த ஆராய்ச்சி சட்டபூர்வமாக இடம்பெறவேண்டும்.

இராவணன் இலங்காபுரியை ஆண்ட பலம் வாய்ந்த தமிழ் மன்னன் அவர் சிவபொருமானின் தீவிர பக்தனாக இருந்துள்ளார். அதற்கான பல ஆதாரங்கள் உள்ளது. திருக்கோணேஸ்வரத்தின் வலது புறத்தில் உள்ள இராவணன் வெட்டு அதற்கு ஒரு சான்றாகும் என்றார்.

இராவணன் இலங்கையில் பல சிவாலயங்களை கட்டியது மட்டு மல்லாது இந்தியா இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் சிவாலயங்களை அமைத்துள்ளார். இந்தியா மற்றும் ஏனைய பல நாடுகளில் அவரை கடவுளாக வழிபடும் வழக்கமும் காணப்படுகின்றது.

இராவணன் ஆயுள்வேத வைத்தியத்திலும் கை தேர்ந்தவர் என்றும் வரலாறு கூறுகிறது. இராமாயணத்தில் ராமன் பற்றி அதிகமாக கூறப்பட்ட போதும் இராவணன் பற்றிய தகவல்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை அந்த குறையை போக்க யார் இந்த இராவணன் என்ற நூல்வெளி வந்துள்ளது என்று நான் கருதுகின்றேன்.

எனவே சரித்திர ரீதியான ஆய்வுகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளியீட வேண்டியது அவசியம்  இவ்வாறான ஒரு சரித்திர ரீதியான ஆய்வு நூலை வெளிட்ட நூலாசிரியர் என.கே.எஸ்.திருச்செல்வத்துக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47