(வீ.பிரியதர்சன்)

* போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்பே யாழ் கோட்டையில் மக்கள் வாழ்ந்தனர்.

* யாழ்ப்பாண கோட்டைப் பகுதியில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள்.

* தமிழக நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

* அரோபிய, சீன வர்த்தக வணிகம் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள்.

* யாழ். கோட்டைப்பகுதி 'ஐந்துசார் வளவு' என்று அழைக்கப்பட்டுள்ளது.

போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்பே யாழ்.கோட்டைப் பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளதாகவும் 

16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் யாழ்ப்பாண கோட்டைப் பகுதியில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக தொல்லியல்  பேராசிரியர் புஸ்பரெட்ணம் தெரிவித்தார்.

யாழ்ப்பாண கோட்டைப் பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கையின் போதே மக்கள் அங்கு குடியிருந்து, வாணிக நடவடிக்கை இடம்பெற்றிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இதில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். 

இந் நிலையில் இதற்கான ஊடகவியலாளர் மாநாடு இன்று யாழ்.பல்கலைக்கழக தொல்லியல் திணைக்கள விரிவுரை மண்டபத்தில் இடம்பெற்றது. 

இதன்‍போது கருத்து தெரிவிக்கையிலேயே பேராசிரியிர் புஸ்பரெட்ணம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் 1800 அதாவது போர்த்துக்கீசர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் மக்கள் குடியிருப்புக்கள் இருந்துள்ளன.

அதற்கான ஆதாரங்களை யாழ்.நகர ஆய்வு, யாழ்.நகரின் தோற்றம் போன்ற தொல்பொருள் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. 

இருப்பினும் அங்கு கிடைக்கப்பெற்ற தொல்லியல் புராதான சின்னங்கள் என்பன போர்த்துக்கீசர் வருகையின் முன்னர் யாழ். கோட்டைப் பகுதியல் மக்கள் வாழந்துள்ளனர். 

அங்கு தமிழக நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. அரோபிய சீன வர்த்தக வணிகம் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் சிதைவடைந்த கத்தோலிக்க தேவாலயாம், சிதைவடைந்த இந்து தேவாலயங்களுக்கான ஆதாரங்கள் சோழர் கால கட்டட ஆய்வு சிதைவுகள் என்பனவும் மீட்க்கப்பட்டுள்ளன. 

அக்காலத்தில் யாழ்ப்பாண கோட்டை அமைந்துள்ள பகுதி 'ஐந்துசார் வளவு' என்று அழைக்கப்பட்டுள்ளது.

யாழ். கோட்டை அமைந்துள்ள பகுதியில் கடல் மார்க்கமாக வணிகங்கள் மற்றும் மக்கள் குடியிருந்து வாழ்ந்தமையையடுத்தே போர்த்துக்கீசர் அப் பகுதியில் கோட்டை அமைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 

யாழ்ப்பாண நகரத்தின் தோற்றம் என்ற தொல்லியல் ஆய்வுக்குட்பட்டு யாழ்ப்பாண கோட்டைப் பகுதியில் 62 ஏக்கர் நிலப்பரப்பில் தொல்லியல் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். 

இதன்போது நாம்ப முடியாத ஆச்சரியமான வகையில் தொல்லியல் புராதான சின்னங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இதில் உள்நாட்டு வெளிநாட்டு நாணயக் குற்றிகள், மட்பாண்டங்கள், இந்து ஆலய அழிவுகள், கல்வெட்டுக்கள் என்பன மீட்ககப்பட்டுள்ளது என்றார்.