உலகம் முழுவதும் எழுபத்தியாறு நாடுகளில் விஸ்கல் லெசிமனிசீஸ் என்ற தோல் நோய் பரவியிருக்கிறது.

 குறித்த நோயினால் ஆண்டுதோறும் மூன்று லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். குறித்த நோய் மணல்வெளியில் , சம தளத்தில் பறக்கும் ஒரு வித பூச்சிகள் அதாவது புரோட்டோஜோன் ஒட்டுண்ணிகள் எனப்படும் ஒரு வகையினதான பூச்சிகள் கடிப்பதால் ஏற்படுகிறது. 

குறித்த பூச்சிகள் கடிப்பதால் எலும்பு மஜ்ஜை, மண்ணீரல்,கல்லீரல் ஆகிய பகுதிகளை பாதிக்கிறது. போஸ்ட் காலா அஸார் லீஷ்மனிசீஸ் எனப்படும் இந்த நோய், லீஷ்மனியா டோனோவானி என்ற சரும செல்கள் பாதிக்கப்படுவதன் காரணமாக எற்படுகிறது. ஒரு சிலருக்கு தோலில் புண்ணாகவும், கட்டிகளாகவும் உண்டாகிறது.

இத்தகைய நோயின் பாதிப்பு தொடக்கநிலையில் தீவிரமாக இருப்பதில்லை. பின்னர் நோயெதிர்ப்பு சக்தியை தாக்குகிறது. இவை இரண்டு மாதம் முதல் எட்டு மாதம் வரை உடலில் தங்கியிருக்கும் தன்மை கொண்டது. இதன் போது ஏற்படும் காய்ச்சலும், சோர்வும் தான் இதன் அறிகுறிகள். இதற்கு தற்போது நவீன மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இந்த பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டும், குணமாக்கப்பட்டும் வருகிறது.

குறித்த பூச்சிகள் தரையிலிருந்து குறைவான உயரத்திற்கு பறக்கும் சக்தியைக் கொண்டதால் இரவு நேரத்தில் வீட்டில் உறங்கும் போது சற்று உயர்வான இடத்தில் படுக்கையமைத்து உறங்குவது நல்லது. உடல் முழுவதும் போர்த்திக்கொள்ளும் படியான ஆடையை அணிந்து உறங்குவதும் இத்தகைய பூச்சிகளின் கடியிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழிமுறை. இந்த பூச்சி நுளம்புவை விட உருவத்தில் சிறியது என்பதால் இதற்கான விசேட வலையையும் பயன்படுத்தலாம்.